தமிழ்ஈழத்தின் காந்தி'' செல்வநாயகம்,

தமிழ்ஈழ வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது.

பல ஆண்டுகளுக்கு முன்பே "தமிழ் ஈழம்'' கோரிக்கை, தமிழ்ஈழத் தமிழர்களால் எழுப்பப்பட்டது. " தமிழ்ஈழத் தமிழர்களின் தந்தை'' என்றும் " தமிழ்ஈழத்தின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம், தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள்.எனவே, " தமிழ்ஈழதமிழர்கள் மானத்தோடு வாழ 'சுதந்திர தமிழ் ஈழம்' தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார்.அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது.